புதன், 16 ஏப்ரல், 2025

பெண் பாவம் பொல்லாதது! ஆண்களே உசார்!

  பெண் சாபம் கொடுமையானது!


  
பெண்கள் என்றால் இளித்த வாயர்களா?

பொதுவாகவே ஒரு ஆண் வீட்டிற்கும் ஊருக்கும் அடங்காமல் சுற்றித்திரிபவனாக இருந்தால், அவனுக்கு ஒரு கால்யாணைத்த பண்ணிட்டா, அந்தப் பொண்ணு வந்து அவனை சரி பண்ணிடுவா, கால்கட்டு போட்டுட்டா எல்லாம் சரியாகிடும், நீதாம்மா அவனைத் திருத்தணும், என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம், நாமும்,இவற்றையெல்லாம் அனுபவித்திருப்போம்.

ஆணை பெற்ற பெற்றோர்களே!

ஒரு குழந்தையை சமூகத்தில் நல்லவனாக ஒழுக்கம் உள்ளவனாக வளர்க்கவேண்டியது அந்தக் குழந்தையின் பெற்றோர்கள்தானே? அப்படி அவர்கள் கடமையைச் சரிவர செய்யாமல், பிள்ளையை அவன் போக்கில் வளர்த்து விட்டு, அவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைத்து அவள் பார்த்துக்கொள்வாள் என்று அவள் உயிரை ஏன் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை!

வாயில் விரலை வைத்தாலும் கடிக்க மாட்டார்கள்

பெண்ணாய் பிறப்பதே சவால்தான், இதில் அவள் வளர வளர அவளின் பிரச்னைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். சாகும்வரை அவள் வாழ்க்கை போராட்டம்தான். இதில் இவனுங்களவேறு திருத்தணும், ஏன் அவர்களுக்குத் தெரியாதா? நல்லது எது, கேட்டது எது என்பதெல்லாம்? ஏன்? அவ்வளவு அப்பாவியா ஆண்கள்?

முதல் கோணல் முற்றிலும் கோணல்:

முதன்முறை அவன் தவறு செய்யும்போதே, அவனுடைய பெற்றோர் அவனைக் கண்டித்து திருத்தி நலவழிப்படுத்தி வளர்த்திருந்தால், அந்தப் பாரம் பிற்காலத்தில் அவனுக்கு மனைவியாகப் போகும் அந்தப் பெண் மீது விழாது அல்லவா?

ஒரே பிள்ளையாக இருந்தால் என்ன:

என் மகன் ஒரே பையன் என செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி  பின்னர் திருமணம் என்னும் பெயரில் இன்னொரு பெண்ணின் வாழ்வோடு விளையாடுவது, என்னது இது? அப்படி விளையாடினால் விளைவுகள் உங்களை கடைசிவரை விரட்டி விரட்டி வேட்டையாடும் என்பதை மறக்க வேண்டாம். ஏனென்றால், பெண் பாவம் பொல்லாதது!

பெண் பாவம் என்றால் என்ன:

சாபங்களில் பல வகை உண்டு, பதிமூன்று வகையான சாபங்கள் இருப்பதாக இந்து தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இவற்றில் மிக ஆபத்தானது பெண் சாபம், பெண் சாபம் மட்டும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

சாபம் என்றால் என்ன:
நல்லவர்கள் மனம் வெதும்பி தனக்கு தீமை செய்தவர் மீது சபிக்கும் வார்த்தைகள்தான் சாபம் எனப்படுவது, இதை வாய் விட்டுத்தான் கூற வேண்டும் என்பதில்லை, மனதிற்குள்ளேயே நினைத்தாலும் சாபம்தான், சொல்லப்போனால் மனதிற்குள் விடும் சாபம்தான் வீரியம் அதிகம். அதைத்தான் சாபம் என்று சொல்கிறோம். இந்தச் சாபங்களை பதிமூன்று வகைகளாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள்.  

13 வகையான சாபம்:  பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம்,பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம். இங்கு பெண் சாபம் முதலில் இருப்பதை கவனிக்கவும்.

பெண் சாபம்: ஒருவரின் வாழ்க்கையில் பிறரின் சாபத்தால் ஏற்பட்டதுதான், பின்பு தோ மாக மாறுகிறது   தோம் என்றால் குற்றம் என்று பொருள். ஒருவர் அறிந்தோ அரியாமலோ செய்யும்  வினையின் எதிர்விளைவுதான் தோம். சாபம் என்பதுஒருவர்செய்யும்தீமையினால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் சபிப்பதுதான் சாபம்.

ஜாதகம் கூறுவது என்ன : கடுமையான இந்த தோம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சந்ததியினரை பாதிக்கிறது. இந்த தோம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறியமுடியும் என்கிறது ஜோதிட உலகம்

பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது: பெண்கள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல், உடன் பிறந்தோர்களின் ஆதரவில்லாமல் வாழ்வது, வீட்டிற்கு மருமகளாக வாழ வந்த பெண்ணை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவது, பிறந்த வீட்டிற்கு திருப்பி அனுப்புவது போன்றவை பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன.

காதலியை நம்ப வைத்து கழுத்தருப்பது:

பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது. அவள் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது.  பெண்களை ஏமாற்றுவது.  பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது. கட்டிய மனைவிக்கு துரோகம் இழைப்பது. காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றுவது.

ஏமாற்றாதே, ஏமாறாதே:

பெண்களிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றுவது. மனம் வருந்தும் படியான கடுஞ்சொற்களை பேசி அழ வைப்பது. உழைக்காமல்  பெண்ணின் வருமானத்தில்  காலம் தள்ளுவது, பணத்திற்காக பெண்ணை ஏமாற்றி மோசம் செய்வது, தாயை பராமரிக்காமல் விட்டுவிடுவது, கருவில்  உள்ள பெண் குழந்தையை கலைப்பது.

வழி வழியாக வரும் தலைமுறை சாபம்:

அவரவர் குடும்பத்தில் உள்ள முன்னோர் அல்லது பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தோர் பெண்களுக்கு செய்த கொடுமைகள் தான் பெண் சாபமாக உருவெடுக்கிறது. அப்பெண்கள் அந்தந்த குடும்பத்தையோ அல்லது பிற குடும்பத்தையோ சார்ந்தவர்களாக கூட இருக்கலாம்.

ஒழுக்கமான பெண்:

இதனால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான முறையான பரிகாரங்களை செய்து கொள்ளா விடில், அவை பல தலைமுறைகளுக்கு கூட தொடர்ந்து வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஒழுக்கத்தில் நெருப்பாய் உள்ள பெண்மணியை எவரேனும் வஞ்சித்தால் அவள் படும் துயரமே போதும் வஞ்சித்தவர் பூண்டோடு அழிய! தனியே அறம் உரைக்கக் கூட வேண்டாம்! பெண் அடைந்த துயரத்தின் விளைவுக்கு மாற்றே கிடையாது! துயரம் விளைவித்தவர் தீப்பயனைத அனுபவித்தே ஆகவேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மனக்குமுறல்:

நேர்மையின்றி அடுத்தவர் நோகும்படி அல்லது பாதிக்கும்படி எதை செய்தாலும் அது பாவம். அப்படி நம்மால் கஷ்டப்பட்டவர் மனம்நொந்து ஏதேனும் நம்மைப்பற்றி மனதில் நினைத்தால் அது சாபம். மனதின் எண்ணங்கள் சிதறாமல் குவிந்து வெளிப்படும் அலைகளுக்கு மிகுந்த ஆற்றல் உண்டு என்பது தவசிகளே கூறி இருக்கிறார்கள் . எனவே நிச்சயம் ஒருவரின் சாபம் நம் வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும்.

பெண் சாபம் என்பது உண்மையா:

சாதாரணமாக பெண்கள் இறக்க குணம் உள்ளவர்கள், எதையும் தாங்கிக்கொள்ளும் மன நிலை உள்ளவர்கள், இந்த பூமியில் உள்ள அணைத்து உயிர்களையும் படைத்தவர்கள், அப்படிப்பட்ட பெண்களிடம் சாபம் வாங்கினால், எத்தனை பிறவி எடுத்தாலும் தொடர்ந்து வரும்.

பெண்ணிடம் சாபம் பெற்றதை எப்படி தெரிந்து கொள்வது:

இளம் வயதிலேயே தாயை பிரிந்து தவிக்க வேண்டிய நிலை வரும், மனதை காயப்படுத்தும் அளவுக்கு காதல் தோல்வி ஏற்படும். மனைவியால் பல தொல்லைகள் ஏற்படும், தலை கணம் பிடித்த மனைவியிடம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும், இருவரும் பிரிந்து வாழக்கூடிய நிலைமை வரும். ஆண்களுக்கு திருமண தடை ஏற்படும், அப்படியே திருமணம் ஆனாலும் குழந்தை பேரு இருக்காது, மனைவி தன்னுடன் வாழமாட்டாள், வேறு ஒருவனுடன் வாழ்ந்து முதல் கணவனுக்கு மனவேதனையும், துயரத்தையும் கொடுத்துக்கொண்டு இருப்பாள்.

 

  பெண் சாபத்திற்கு பரிகாரம் உள்ளதா?

வீட்டில் உள்ள இளம் வயது பிள்ளைகளுக்கு, குறிப்பாக  ஆண்களுக்கு பல விதமான பிரச்சனைகள், பல காலமாக திருமணம் ஆகாமல் இருப்பது, விடாமல் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருந்தால், அந்த குடும்பத்தில் பெண் சாபம் உள்ளதாக அர்த்தம். இப்படி உள்ளவர்கள் நல்ல ஜோதிடரை அணுகி ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று ஆராயலாம்!

பெண் சாப தோசம் :

ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் பெண் கிரகங்களாக கருதப்படுகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் பெண் கிரகங்களான இந்த இரு கிரகங்களும் பாதிக்கப்பட்டாலும், பலம் இழந்து இருந்தாலும் கேதுவோடு தொடர்பு பட்டிருந்தாலும் அவர்கள் பெண் சாபத்தால் பாதிக்க பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

உன் ஜாதகம் உன் கையில்:

முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ, தெரியாமலோ பெண்களின் சாபத்தை பெற்றவர்களுக்குதான் இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருக்கும். ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் ஏழாம் இடத்து அதிபதியோடு கேது சேர்ந்து இருக்கும் நிலை இருக்கும். பெண் கிரகங்கள் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம் பெறாமல் இருப்பதும் முற்பிறவி சாபத்தால்   ஏற்ப்பட்டவை.

முதலில் தவறு பிறகு வருத்தம்:

மண்ணை வாரித் தூற்ற வேண்டாம், காறி உமிழ வேண்டாம், கடுஞ் சொற்களால் வசை பாட வேண்டாம், அநியாயத்தால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது, இயலாமையுடன் நிற்கும் அப்பாவி பெண்ணின் ஒரு துளி கண்ணீர், அவருக்கு தீங்கிழைத்தவரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி விடும்.

மனம் உடைந்த பெண்ணின் மன்னிப்பு:  

நம் பாவங்கள் கரைவது பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்பினால் மட்டுமே, பரிகாரங்களால் அல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும். இப்பொழுது சிலபேர் தைரியமாக தவறுகளை செய்துவிட்டு விசேட பரிகாரம்   செய்கிறேன் என்று கூறிக்கொண்டு, நான்கைந்து புரோகிதர்களை வைத்து தெருவே கேட்கும்படி மம் வளர்க்கிறார்கள். தவறு செய்தவருக்கு  தாமதப்படும் தண்டனை, பல மடங்கு வட்டியோடு தவறு செய்தவரை வேட்டையாடும்.

தப்பு செய்தவன் தப்பிக்க முடியாது:

இந்த பிரபஞ்சத்தில் யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக அதற்கான பலன்களை அறுவடை செய்தே ஆக வேண்டும், இதற்காக நாம் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டிய அவசியமில்லை, தவறு செய்தவர்கள் தான் அஞ்ச வேண்டுமே தவிர, தவறு செய்யாதவர்கள் வருந்த வேண்டியதில்லை.

காரணமின்றி இடப்பட்ட சாபம் ஒருபோதும் பலிக்காது, ஆனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண் மனம் நொந்து  அவர் பக்கம் நீதி இருக்கும் பட்சத்தில், அந்த சாபம் கண்டிப்பாக வேலை செய்யும். அநியாயமாகத் துன்புறுத்தப்பட்ட பெண்  வயிறெரிந்து சாபமிட்டால், அந்த சாபம் பலிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.



முடிவுரை: கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு, பெண்கள் தேவைகள் அல்ல அவர்கள் தேவதைகள். எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் என்று மகாபாரதத்தில் கூறியிருக்கிறது என்றால் பெண்ணின் அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும். பெண்கள் வளர்ச்சி அடைந்த குழந்தைகள் என்றால் அது மிகை ஆகாது.

2. வாழ்க்கை என்ற ஆற்றை, கடப்பதற்குப் பெண் என்ற படகு அவசியம் தேவை. பெண்ணாக இருப்பதென்பது மிகமிக கடினமான விசயம், ஆண்களைச் சமாளிப்பதே முதன்மையான காரியமாக இருப்பதால். பெண் இந்த உலகத்தில் ஒரு தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும், சகோதரியாகவும் நின்று தன் கடமைகளை செய்யும் ஓர் அற்புத பிறவி.

3. ஓர் ஆண் பெண்ணை கண் கண்ட தெய்வமாக மதிக்க வேண்டும், மாறாக, மிதித்தால் அவள் கண்ணகியாக மாறி உங்களுக்கு இடும் சாபம் ஏழு தலை முறைக்கும் தொடரும்! பரிகாரம் என்பதெல்லாம் வீண் வேலை! பகல் கனவு! செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.

4. ஆகையால், ஆண்களே! பெண்களிடம் மோதாதீர்கள், அவர்கள் கெட்ட பெண்களாக இருந்தாலும் அவர்களை மதியுங்கள், அவர்கள் மனம் நோகும்படி நடந்து வீணாக வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்பெண்ணை பகைத்துக் கொண்டாள்? மன்னிப்பு என்ற வார்த்தை இறைவனின் இல்லத்தில் இல்லை, மறக்கவேண்டாம்!


2 கருத்துகள்:

What will happen? Could India-Pakistan tensions spin out of control?

    What will happen?  Could India-Pakistan tensions spin out of control? We are in an awkward situation; two nuclear-armed countries ...