வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தலைவிதி என்றால் என்ன?

தலையெழுத்து என்றால் என்ன?

தலையெழுத்து, தலைவிதி என்பதெல்லாம்  ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் நமது  தலையெழுத்தை கடவுள் எழுதி, நமது   ஒவ்வொருவர் தலையிலும் பதிவு செய்துவிட்டார் என்று நம்புவது சுத்த அப்பாவித்தனம், கண்மூடித்தனம். நம் தலையெழுத்தை நாமேதான் ஒவ்வொரு நாளும் எழுதிக்கொள்கிறோம். அதாவது அவரவர் தலை எழுத்தை அவரவர்களே மண்டையில் பதிவிட்டுக்கொள்கிறோம்.

 ஒரே நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரு குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ஒன்று மாடி வீட்டிலும்   இன்னொன்று குடிசையில் பிறக்கின்றது, இதை  பார்க்கும் பொழுது தலைவிதி உண்மை என்று  தெரியவருகிறது.

ஒரே தாய் தகப்பனுக்கு பிறக்கும் மூன்று பிள்ளைகள், மூவருமே வெவ்வேறு  உருவத்தில் உள்ளனர், எப்படி? பின்பு வளர்ந்து பள்ளிக்கு செல்லும்பொழுது, ஒருவன் நன்றாக படிக்கின்றான், ஒருவன் சுமார் ரகம், இன்னொருவன் படிப்பே வரவில்லை என்று, ஊர் சுற்றிக்கொண்டு, அப்பா அம்மாவின் பணத்தில் குடி பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டான், எப்படி? ஒரே பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகள் செங்கற்களைப்போல ஒரே மாறியல்லவா இருக்கவேண்டும்?

சரி போகட்டும், அவர்கள் மூவரையும் அளந்து பாருங்கள், ஒருவர் உயரமாகவும், ஒருவர் மிதமான உயரமாகவும், ஒருவர் குள்ளமாகவும் இருப்பார்கள். இது எப்படி? அதேபோல், ஒருவர் நல்ல சிகப்பு, மீதமுள்ள இருவரும் கருப்பு. ஒரே ரத்தத்தில் வந்தவர்கள்தானே? மூவரும் ஒரே வீட்டில், ஒரே உணவு, ஒரே சுற்றுப்புற சூழ் நிலை, இதற்க்கு காரணம்?

மூவரும் வெவ்வேறு இடத்தில இருந்து வெவ்வேறு சூழ் நிலையில் வளர்ந்து இப்பொழுது இந்த இருவருக்கும் இந்த ஜென்மத்தில் அவர்கள் வயிற்றில் வந்து பிறவி எடுத்திருக்கிறார்கள், அவ்வளுவுதான். நாடகம் முடிந்தவுடன் இந்த ஐவரும் பிரிந்து, ஒருவர் பின் ஒருவராக, அதுவும் தனித்தனியாக, உயிர் கூடு விட்டு கூடு தேடி, இந்த ஐவரும் வெவ்வேறு வீட்டிற்கு சென்று விடுவார்கள், ஒருக்குவருக்கு ஒருவர் யார் என்று கூட தெரியாது. இதுதான் இயல், இசை, நாடகம் என்பது!

இயல், இசை, நாடகம் என்றால் என்ன?

இயல் என்றால் இறைவன், அதாவது நம்மை படைத்தவன். இசை என்றால் உடுக்கை, அவன் உடுக்கையை அசைத்தால் நாம் அனைவரும் அதற்க்கு தகுந்தாற் போல் ஆடவேண்டும். நாடகம் என்றால், தெருக்கூத்து, அதாவது ஒருமேடை அமைத்து அதில் நாடகத்தை அரங்கேற்றவேண்டும், நாடகம் என்றால் நடிகர்கள் வேண்டும் அல்லவா?

இப்பொழுது நடிப்பதற்கு ஆள் வேண்டும். நடிகர்கள் பெயர்கள் பின்வருமாறுஅம்மா, அப்பா, மகன், மகள், மாமா, மச்சான், மாமியார், மருமகள். சரி இப்பொழுது வில்லன், வில்லி வேண்டும் அல்லவா? வில்லன் வேடத்தில் மாமா நடிப்பதாக ஒப்புக்கொண்டார், வில்லி பாத்திரத்தில் மாமியார், நான் நடிக்கிறேன் என்று மிக ஆர்வமாக முன்வந்தார், மாமியார் எனும் அதிகார போதை அல்லவா! இப்பொழுது இந்த நாடகம் முடிந்ததும், அவரவர்கள் வேடம் கலைந்துவிடும், அவரவர்கள் சொந்த வீட்டிற்கு புறப்பட வேண்டியதுதான். இதுதான் வாழ்கை!

தலையெழுத்தை மாற்ற முடியுமா?

தலையெழுத்தை ஓரளவிற்கு மாற்ற முடியும். எவ்வாறு என்பதைப் பற்றி சற்று சுருக்கமாக  பார்ப்போம். நம்முடைய வினை பதிவே (நல்லவை, தீயவை) நம்மை பின் தொடர்கிறது, நாம் இந்த உலகில் எந்த மூலையில் பிறவி எடுத்தாலும் நம்மை பின் தொடர்கிறது, அவ்வளவு பாசம் நம்மீது. வினைப்பதிவுகளின் காரணமாகவே, நாம் பிறவி எடுக்கின்றோம். எனவே, வினைப்பதிவு என்பதே தலையெழுத்தாக மாறுகிறது.

நமக்கு இரு வகையான வினை பதிவுகள் உள்ளன. அவற்றை முன் வினை, பின் வினை என்றும் கூறலாம். அதாவது முற் பிறப்பில் செய்த செயல்கள், இப்பிறப்பில் செய்த்துகொண்டு இருக்கும் வினைகள். இறந்த காலம், நிகழ் காலம் என்று சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

வடமொழியில் பின்வருமாறு கூறுவர்சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாம்ய கர்மம்மேலும் ஒருவரது வினைக்கடலினை கடக்க இரண்டு  படகு (தோணி) உண்டு என்கிறார் திருமூலர் (திருமந்திரம்

அறம் மற்றும் தவத்தின் துணையினால் வினை என்னும்  கடலினை கடக்க முடியுமெனக் கூறுகிறார். எனவே, தவம் மற்றும் அறத்தின் துணையால், நம்மால் தலையெழுத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

 தலை எழுத்தை ஊழ் என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்

குறள்: ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் குறள்: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் குறள்: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு!

உழைப்பிற்கு உள்ள பலன் என்ன?

உங்கள் உழைப்பின் பலன் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை உங்களோடு இருக்கும் ஆன்மாக்களே தீர்மானிக்கின்றன. அதையே வடமொழியில் கர்மா என்றும், விதி என்றும் கூறுகின்றனர்.

மானிடர்கள் செய்கின்ற நற்செயலும் தீயச்செயலும் மானிடர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. அதை விதி என்றும் கூறுவர். விதி என்றால் நிர்ணயிக்கப்பட்டது, சட்டம் ஆக்கப்பட்டது என்றுக் கருதலாம். முற்பிறவி பாவங்கள் இப்பிறவியில் துன்பத்தை தருகிறது என்றெல்லாம்  யோகிகள், தவசிகள், சித்தர்கள் கூறுவர்.

கிரக நிலை ஒரு சரீரத்தின் எதிர்கால நிலையை முன்னரே அறிவிக்கிறது என்று கூறுகிறார்கள். இது உண்மையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறன். அதன்படி பார்க்கும் பொழுது அவர்கள் சரீரம் எப்படியிருக்கும், நடத்தை எப்படியிருக்கும் என்று பொதுவாக கணிக்க இயலும் என்று நினைக்கிறேன். ஆனால் கணிப்பவர் புத்திசாலியாக இருக்கவேண்டும்.

சகல  மனிதர்களும் அவர்களுடைய முந்தய பிறவியின்  ஆவிகளால் ஆட்டுவிக்கப் படுகிறார்கள்.  மனிதர்களின் ஆவியுடல் அவனுடைய ஆன்மாவுடன் ஒட்டிக்கொள்ளும் அவனுடைய இறுதிக்காலம் வரை. ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில்  சில ஆவிகளுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.

எல்லா மானிடர்களும் சதை, எலும்பினால் ஆன வெறும் ரோபோக்கள் (Robot), ஆவிகள் தங்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் (Puppet).

ஒரு மனிதனுடைய விதியை அவனுடன் இருக்கும் ஆவிகள் அவனுடைய அன்றாட செயல், சிந்தனை அவன் உள்ளிருந்து ஆட்டுவிக்கின்றன . இந்த விதி மாறும் தன்மையுடையது.

ஆயினும் தண்டனையிலிருந்து முழுமையாக தப்ப இயலாது. சில பிடிவாதம் மிகுந்த ஆவிகள் அவர்கள் தண்டிக்கப்படுவதை காணாமல் செல்வதில்லை. முற்பிறவி பாவங்கள் என்றெல்லாம் கூறுவது சரியே .

ஒவ்வொருவரையும் தனித்தனியே தானே கண்காணிப்பதும் அவர்களை வழிநடத்துவதும் இறைவனால் இயலாதக் காரியம் என்றே நான் நினைக்கிறேன். ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும், அவர்கள் தவறு செய்யும்பொழுது தண்டிப்பதற்கும் இறைவன் ஆன்மாக்களை உருவாக்கி இருக்கிறார்.

அந்த  ஆவிகள் அவன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. அது நல்ல ஆவியாகவும் இருக்கலாம் அல்லது தீய ஆவியாகவும் இருக்கலாம். இரண்டும் சேர்ந்து இருப்பதும் உண்டு, அது ஒருவருடைய முன்வினையை பொறுத்தது.

நம்முடன் இருக்கும் ஆவிகள் நம்முடைய அன்றாட செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. நம்முடைய  கடந்த காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது, நிகழ் காலம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

தலைஎழுத்து படிதான் வாழ்வு அமைகின்றதா?

உழைப்பின் முக்கியத்துவத்தை கணக்கில் எடுத்தால், அது விதியை மாற்றும் சக்தியைக் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை . உழைப்பின் மூலம், நம் வாழ்வின் நிலையை மாற்ற முடியும். அதாவது தன்னம்பிக்கையுடன் உழைத்தால், அது நம் வாழ்வில் மாற்றங்களை கொண்டுவரும் என்பது உண்மைதான்.

என் தலைவிதியை நான் திருத்தி எழுதுவது எப்படி?

நம் எண்ணத்தை சுத்தப்படுத்த வேண்டும் , அதற்கு நமக்கு நல்ல குணம் வேண்டும், இவை இரண்டும் இருந்தால் மனம் தூய்மை அடையும், மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டா, என்று திருமூலரின் திருமந்திரம் சொல்கிறது! எல்லா உயிர்களிடத்திலும் கருணை வேண்டும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுகிறார். அன்பே சிவம், மனமே குரு என்று சமீபத்தில் மறைந்த திருவள்ளூர் நித்யானந்த சுவாமிகள் அருளுகின்றார். நடத்தையில் நேர்மை, வார்த்தையில் உண்மை இவை இரண்டையும் அவசியம் கடைபிடிக்க வேண்டும், இவைகளை வைத்து நம் தலை எழுத்தை மாற்றி எழுத இயலும்.

என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கூறுகிறேன்: என்னுடைய இரண்டாவது மகனும் மூன்றாவது மகனும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள், அப்பொழுது மூன்றாவது மகன் வாசலில் தலையை இடித்துக்கொன்டான், ரத்தம் கொட்டியது, அவன் ஐயோ, ஐயோ என்று கத்தினான், கதறினான். வயது சுமார் மூன்று இருக்கும், இதை கேட்டு ஓடோடி வந்த குழந்தையின் தாயார் பதறிப்போனார், மகனை வாரி அணைத்துக்கொண்டு, ஐயோ ஐயோ என்று சொல்லாதே என் கண்ணே! முருகாமுருகா என்று சொல் பார்த்தாஎன்று சோகம் கலந்த பாசத்துடன் கூறினார்

நாம் உச்சரிக்கும் வார்த்தை கூட இறைவனின் பெயராக இருக்கு வேண்டும் என்பதே இந்த உண்மை சம்பவம் உணர்த்துகின்றது!

சுருக்கம்: எழுத்துக்களை இருட்டில் படிக்க முடியாது, சில வார்த்தைகளை பகலிலும் படிக்க முடியாது (மருத்துவரின் மாத்திரை சீட்டு) அதுகூட பராவாயில்லை, நான் எழுதியதை நானே படிக்க முடியவில்லை, நீ எழுதியது நீயே வாசிக்க இயலவில்லை. ஆனால் நாட்கள் ஓட ஓட கொஞ்சம் கொஞ்சமாக புரியவரும். நல்லது, கெட்டது நடக்க, நடக்க எல்லாமே தெளிவடையும். அதுதான் தலை எழுத்து, இந்த எழுத்து புரிவதற்குள். என் கதை முடிந்துவிடும். நானே எழுதிய என் தலை எழுத்தை என்னால் படிக்க முடியவில்லை, காரணம் அதுதான் என் தலை விதி.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி. (371)

 நான் வளவளன்னு 700 வார்த்தையிலே சொல்லியதை அவர் 7 வார்த்தையில் முடித்து விட்டார். அதனால்தான், அவரை தெய்வப்புலவர் என்று அழைக்கிறார்கள். அவர் நல்வினை உள்ளவரை 'ஆகூழ்' என்கிறார் தீவினை செய்தவரை 'போகூழ்' என்கிறார். என்ன அற்புதமான குறள்.

 இந்த ஊழ் வினையில் இருந்து தப்புவதற்கு ஏதாவது  சொல்லியிருக்கிறா என்று பார்க்கலாம்!

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 

மெய்வருத்தக் கூலி தரும் (619)

 தீஊழ் உன்னை துரத்தி அடித்தாலும், உன் கடின உழைப்பை பார்த்து, உன்னை பிடித்த ஊழ் கொஞ்ச காலம் உன்னை விட்டு ஒதுங்கி நிற்கும் என்பதுதான் இதனுடைய உண்மையானா அர்த்தம். You Tubeல் சிலர் சொல்வதெல்லாம் ுத்த அபத்தம்.

இறுதி முடிவு: ஏற்கனவே எழுதிய எழுத்தை எப்படி அழிப்பது, அது அழியாத மை ஆயிற்றே, வேண்டுமானால் இனி எழுதப்போவதை சரியாக எழுதலாம், புண்ணிய மை கொண்டு எழுதுவோம். நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, தீமை ஒருபோதும் செய்யக்கூடாது.

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை (852)


What will happen? Could India-Pakistan tensions spin out of control?

    What will happen?  Could India-Pakistan tensions spin out of control? We are in an awkward situation; two nuclear-armed countries ...