திருமுகத்திற்கு ஓர் அறிமுகம்: அருட்ப்ரகாச வள்ளலார்,
இராமலிங்க
அடிகள், இராமலிங்க சுவாமிகள்,
சிதம்பர இராமலிங்கம், பரதேசி இராமலிங்கம்
போன்ற எண்ணற்ற
திருப்பெயர்கள் இவருக்கு
உண்டு,
இவரைப்பற்றி தெரியாதவர்கள் இந்த உலகில் இல்லை என்றே சொல்லலாம், இருந்தாலும் இன்றய
தலைமுறைக்கு அவரைப்பற்றி
பெரிதாக தெரிந்து
இருக்க வாய்ப்பில்லை
அவர்களுக்குத்தான் இந்த அறிமுகம்.
முதலில் சாதனை, பிறகுதான் சோதனை: அருட்ப்ரகாச வள்ளலாரின் எண்ணற்ற சாதனைகளை முதலில் பாப்போம், ஏன் என்றால் நல்ல தகல்வல்களை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும், பிறகுதான் நல்லவையல்லா செய்திகளை கேட்கவேண்டும், அந்த வகையில் திருக்குறள் என்ன சொல்கிறது என்று பாப்போம்: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
பிறவியின் தோற்றம்: சுவாமிகள் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், புவனகிரி அருகில் உள்ள மருதூர் என்ற சிற்றூரில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியினருக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார் நாள் 05.10.1823 இவருக்கு சபாபதி, பரசுராமர் என்ற இரு மூத்த சகோதரர்களும். சுந்தராம்பாள், உண்ணாமலை என்ற இரு மூத்த சகோதரிகளும் இருந்தனர்.
சென்னையில் நீண்டகாலம்: தந்தை இறந்த உடன், தாயார் சிறுது காலம் குழந்தைகளோடு
பொன்னேரி, சின்ன காவானூர்
என்ற ஊரில் சிறிது காலம் வாழ்ந்துவந்தார். பின்னர் சென்னையிலுள்ள ஏழுகிணறு, வீராசாமி பிள்ளை தெருவில்
உள்ள வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார். குழந்தை பருவத்தில்
இருந்து வாலிப
பருவம் வரை
இங்குதான் வாழ்ந்தார்
வள்ளலார்.
33 வருடங்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.
கட்டாய கல்யாணம்: வள்ளலார் வாழ்க்கையில் விதி என்னும் மாயை அவருக்கு எதிராக வேலை செய்தது, அவரது விருப்பம் இன்றியே திருமணம்
நடைபெற்றது. தனது
27 வயதில் அவருடைய சின்ன சகோதரி
உண்ணாமலையின் மகள்
தனம்மாள் என்ற பெண்ணை
1850ல் கட்டாயத்தின்பேரில் திருமணம்
செய்துகொண்டார். ஆனால் அத்திருமணம், வள்ளலாரின் ஆன்மீக பயணத்தை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.
சென்னையில் அவர் அடிக்கடி போகும் ஆலயங்கள்: கந்தக்கோட்டம் கந்தசாமி,
படவேட்டம்மன், திருவொற்றியூர் பட்டினத்தார். சென்னையில் இவரிடம்
மாணவர்களாக இருந்தவர்கள்
பல பேர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்:
தொழுவூர் வேலாயுதம் முதலியார்,
நரசிங்கபுரம் வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம்
பிள்ளை, கயத்தாறு ஞான
சுந்தரம் ஐயர் போன்றோர். இதில் முதலில் குறிப்பிட்டவரின்
பெயரை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்.
பள்ளி இல்லா பள்ளிகொண்ட
பெருமான்: ஓதாமல் உணர்ந்த உத்தமர்
அருட்ப்ரகாச வள்ளலார், இவர் ஆறாயிரம் பாடல்களைக் கொண்டதிருவருட்பா எளிய நடையில் எல்லோருக்கும் புரியும்படி
எழுதி அருளினார், ஆறுதிருமுறை என அழைக்கப்பட்டது. இப்பாடல்கள் அனைத்தும் ஒன்பது வகையான
இலக்கணங்களைக் கொண்டுள்ளது. அவை: எண்ணிலக்கணம், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம், உரையிலக்கணம், புணர்ச்சியிலக்கணம்
மற்றும் ஒற்றிலக்கணம் என்பனவாகும்.
சாதிகள் இல்லையடி பாப்பா: அடிகளார் சாதி, மதம், இனம் போன்ற அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு, அனைத்து உயிர்களும் இறைவனின் குழந்தைகள். அவற்றை சமமாக பாவிப்பதும்,
கருணையால் உபசரிப்பதும் மட்டுமே இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு என்றார்.
உயிர்களிடத்தில் கருணை: பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல்
பார்ப்பவர் வள்ளலார், ஆடு கோழி பலி பலிகொடுப்பதை
கடுமையாக கண்டித்தார்,
அதுவும் கடவுளின் பெயரால்
உயிர் கொலை
செய்வது மகாபாவம்
என்று அனைவருக்கும்
அறிவுறுத்தினார், சிறு தெய்வ வழிபாடு கூடாதென்றார், காரணம் இங்குதான்
உயிர்களை பலி இடப்படுகிறது.
அதனால்தான் வேண்டாம் என்றாரே ஒழிய,
மற்றபடி சிறுதெய்வங்கள் வழிபாடு
வேண்டாம் என்ற
கொள்கை அவருக்கில்லை.
சுத்த சைவ உணவு படைத்து அதே சிறுதெய்வத்தை வணங்கலாம்
அல்லவா!
இராமலிங்க சுவாமியின் அருள்மொழிகள்: 1.அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருனை 2.எல்லா உயிரும் இன்புற்று
வாழ்க 3.எந்த உயிரையும்
கொள்ள யாருக்கும்
உரிமை இல்லை
4.சீவகாருண்யம் மனிதவாழ்கையின் சீரான முறை
5.சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் நிலைத்த வாழ்வை பெறுவார்கள் 6. மனிதனின் இறுதி
நிலை இறப்பதல்ல,
ஒளியில் கரைந்து இறைவனுடன்
இணைவதுதான் இன்ப
நிலை 7. ஞானமே
மனிதனை துன்பத்திலிருந்து விடுவித்து அமைதியைக் கொடுக்கும். அனைத்து உயிர்களையும் ஒருங்கே பாவித்த மகான்.
இறைவனை அருட்பெருஞ்சோதியாகவும் தனிப்பெரும் கருணை கொண்டவனாகவும் சித்தத்தில்
வைத்து இறுதியில் சோதியாகவே அந்த பரம்பொருளுடன் கலந்து முக்தி அடைந்தவர்.
அதிசயம் ஆனால் உண்மை: இவரை புகைப்படமாக
எடுக்க முயன்று பல முறை தோற்று போயினர். காரணம், இவர் பல சித்துக்களை அடைந்திருந்த
காரணத்தால் அவரின் உடல் ஒளியுடலாக மாறி இருந்தது. அவர் நடக்கும்பொழுது நிழல் தரையில் படாது என்று நேரில் பார்த்த அவரின் மாணவர்கள் (சீடர்கள்) கூறி
உள்ளனர். வேட்டவலம் ஜமீன் ஒரு சிறந்த ஓவியரை வைத்து வள்ளற்பெருமானை
தரூபமாக வரைந்த
படம்தான் இன்றும்
உள்ளது, மற்றப்படங்கள் எல்லாம்
வெறும் கற்பனையே!
நடைமன்னன் நமது வள்ளற்பெருமான்: மிக வேகமாக நடக்கும்
திறன் படைத்தவர்
பெருமான், அவருடன் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்றால் ஓடிக்கொண்டே
நடக்கவேண்டும் அல்லது
நடந்துகொண்டே ஓடவேண்டும்.
சிறிது கூட ஓய்வில்லாமல்
அவரால் நடக்க
முடியும். இவர் அடிக்கடி எங்குதான்
போகிறார் என்பதை
கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரை பின் தொடந்தவர்கள்
பலர், அவர் வேகத்துக்கு
ஈடு கொடுக்க
முடியாமல் முயற்சியை
பாதியிலேயே விட்டுவிட்டனர்,
வேவு பார்த்தவர்கள். எங்களால் அவரை
பின் தொடர
முடியவில்லை, காரணம் அவர் இங்கு இருக்கிறார் கண்ணைமூடி
கண் திறப்பதற்குள்
அங்கு இருக்கிறார்
என்ற பொய்யுறைவேறு.
அவர் எந்த மாயமும் செய்யவில்லை, அவர் நடை
அவ்வளவு வேகம்.
கூடலூரில் கூடிய கூட்டம்: சிதம்பரம் ராமலிங்கம் சொற்பொழிவு
ஆற்ற கடலூர்
வருகிறார் என்று
அறிவித்ததுதான் தாமதம்
ஆன்மிகத்தில் ஆர்வம்
உள்ளவர்கள் அனைவரும்
அலையென திரண்டனர், வள்ளற்பெருமான் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திற்கு விளக்கவுரை கூறப்
புகுந்தவர் 'ந' என்ற முதலெழுத்திற்கு
மட்டுமே சுமார் ஒருமணிநேரம் விளக்கவுரை கூறினார். கேட்டவர்கள் வியந்து வாயடைத்து நின்றனர்,
தொடர்ந்த அடிகளார் மீதம் உள்ள நான்கெழுத்துக்கும்
விளக்கம் சொல்லி
முடித்தார், அங்கு கூடிய அனைவருக்கும்
ஐந்தெழுத்தின் ரகசியம்
ஓரளவே புரிந்திருக்கும்.
காரணம், அவர்கள் எல்லோரும் ஆரம்ப
நிலை மாணவர்கள்.
பாம்பு தீண்டியது, விதி முடிந்தது: கூடலூரில் (கடலூர்) வள்ளற்பெருமான் 1886ல் சிலகாலம் தனது அன்பர் அப்பாசாமி
செட்டியார் வீட்டில்
தங்கியிருந்தார், அப்பொழுது செட்டியார் வீட்டு
அருகில் உள்ள
வாழை தோட்டம்
பார்வையிட சென்றிருந்தார்,
அப்பொழுது
வாழை இலையில்
இருந்த கொடிய
பாம்பு அடிகளை
தீண்டிவிட்டது, அடிகள் பதட்டப்படாமல் தன்னிடம்
இருந்த திருநீறை
கடித்த இடத்தில்
விண்ணப்பித்து வீட்டிற்கு
திரும்பிவிட்டார், செட்டியார் வீட்டில் இருந்த
அனைவரும் பதற்றம்
ஆயினர், அதை கொன்றுவிடுகிறோம் என்று இருவர் விரைந்தனர், சுவாமிகள் அது
இந்நேரம் இறந்து
இருக்கும் என்றனர்,
என்ன ஆச்சரியம் அந்த பாம்பு இலையின் மீது இறந்து கிடந்தது. பாம்பு கடித்தால்
மனிதர்கள் இறப்பது
உண்டு, ஆனால் இங்கோ
பாம்பு இறந்துவிட்டது.
காரணம், அது கடித்தது மனிதனை
அல்ல மகானை.
மஞ்சக்குப்பம் தாசில்தாருக்கு அறிவுரை: மஞ்சக்குப்பம் தாசில்தார் வேங்கட சுப்ப அய்யர் தினமும் அடிகளின் உபதேசங்களைக் கேட்க கடலூருக்கு வருவார். அவரது வண்டிக்கு முன் உதவியாளன் ஒருவன் கொம்பு ஊதிக்கொண்டே ஓடுவது அந்த கால வழக்கம் . ஓர் நாள் மிக வேகமாக ஓடிவர தேரிட்டதால் பசித்து களைத்த அவனது உடல் மயக்கம் வரும் நிலைக்கு வந்துவிட்டது. அன்று தாசில்தார் கூட்டத்திற்கு வந்தவுடன் வழக்கம்போல் அடிகள் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தார். சற்று நேரம் கழிந்தபின் அவரைப்பார்த்து கொம்புக்காரணை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? முன்னதாக போக வேண்டிய இடத்திற்கு அனுப்பி அவ்விடத்திற்குச் சிறிது தூரத்திலிருந்த ஊதினால் போதாதோ! என்று சற்று கண்டிப்புடன் கூறினார் வள்ளற்பெருமான், தாசில்தார் சுப்பு அய்யர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். பசித்து களைத்திருந்த உதவியாளருக்கு உணவளிக்க செய்த பின்னரே அடிகள் அன்றைய உபதேச உரையைத் தொடங்கினர் (கொம்பு படம் மேலே)
உலகின் தலை சிறந்த சீர்திருத்தவாதி: வள்ளற்பெருமான் ஏற்படுத்திய சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு அதனை ஒரு கோவிலாக நினைத்து வழிபடுகின்றனர். ஆனால் அவர் நம்முடன் இருக்கும்பொழுது, ஒருநாளும் அவர் தம்மை ஒரு யோகி என்றோ, சித்தர் என்றோ, குருசாமி என்றோ, ஞானி என்றோ சொன்னதும் இல்லை அறிவித்ததும் இல்லை, பிறரிடம் பொண்ணோ பொருளோ வாங்கியதும் இல்லை, யாகசாலை நடத்தும் பழக்கமும் அவரிடம் இருந்தது இல்லை. தன்னை நாடி வரும் எவரிடமும் தனக்கு பாத பூசை செய்யுங்கள் என்று பணித்ததும் இல்லை, என்னுடைய உருவ படத்தை வைத்து பூஜைசெய்து வாருங்கள் என்று சொன்னதே இல்லை. மிகவும் அரிதான ஞானி வள்ளற்பெருமான், ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி என்றால் அது மிகையாகாது.
தமிழ்க்கடலில் நீந்தி முத்தெடுத்தவர்
வள்ளலார்: மயிலின் ஓசையை 'அகவல்' என்பார்கள்.
ஆண் மயில் தன் இணையை அன்புடன் அழைக்கும்போது ஏற்படுத்தும் ஓர் இனிய
ஓசையே அகவல் எனப்படும். ஓர் கவி மெய்
மறந்து, ஆனந்த களிப்பில் இறைவனை
தன் இனிய கவிதையில் அழைப்பதே
'அகவல்' எனப்படும். இதனைப் பின்பற்றி நமது வள்ளலார் ஆண்டவரிடத்தில்
ஒளியோடு ஒளியாக இணைந்த அனுபவத்தினை ‘அருட்பெரும்ஜோதி அகவல்’ பாடலாக இயற்றி ஆனந்தம் அடைந்தார். படிப்பவர்களையும் பரவசப்படுத்தினார். அகவல் 1596 வரிகள், இது ஒரு உலக சாதனை, ஒரே பாடல்! வேறு யாரும் இந்த
சாதனையை இன்று
வரை செய்யவில்லை,
தெரிந்தால் சொல்லுங்கள், நாமும் அறிந்துகொள்ளவோம்!
எதனால் எரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்: தூங்கியவர் எழ மறந்தால், உடனே சுடுவீர்களா? என்று கேட்கிறார்
சுவாமிகள், நம்மால் பதில் சொல்ல முடியுமா? மனித தேகத்தை
மூன்று வகையாக
பிரிக்கின்றார் வள்ளற்பெருமான்
ஆன்மா, ஜீவன், உடல்.
ஒருவரின் உயிர் போய்விட்டாள்,
அவரிடம் ஜீவன் மட்டுமே உடலை விட்டு பிரிந்து செல்கிறது,
ஆன்மா ஆவியுடலை விட்டு
பிரிவதில்லை சில
நாட்களுக்கு. உடலை நாம் எரித்துவிட்டால்
, நாம் வலு கட்டயாமாகி ஆன்மாவை வெளியேற்றுகிறோம்,
இது கொலைக்கு சமம் எனக்கிறார் அடிகள்.
புதைத்து விட்டால் ஆன்மா எப்பொழுது நினைகின்றதோ
அப்பொழுதுவரை அந்த
உடலில் தங்கிவிட்டு
நேரம் வரும்
பொழுது அடுத்த
பிறவிக்கு தயாராகிவிடும்
என்பதே உண்மையிலும்
உண்மை. இப்பொழுது உங்கள்
பதில் என்ன?
சுத்த பிரணவ ஞான ஒளி தேகம் என்றால் என்ன: பொன்னிற மேனி,
ஐம்பது வயதானாலும் பதினெட்டு
வயது வாலிப
பருவம், முடி வளர்ச்சி
இல்லாமை (நிம்மதியாப்போச்சு). அதுமட்டும் அல்ல,
அவர் தேகத்தில் இருந்து
கற்பூர வாசனை.
ஒளி ஊடுருவி வெளியே போய்விவிடும் ஞான உடல். உதாரணமாக; யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்
ஒரு குத்து
விடுகிறார் என்று
வைத்துக்கொள்ளுங்கள், அருட்ப்ரகாசருக்கு ஒன்றுமே ஆகாது. காரணம், நாவலரின் கை வெளியே
ஊடுருவி போய்விடும்.
இந்த புகைபோன்ற நிலையை வள்ளலார்
அடைந்ததனால் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட மாசிலாமணி
என்ற நிழல்
பட நிபுணர்
வள்ளலாருக்குத் தெரியாமல் பல முறை அவரை படம் எடுக்க முயற்சி செய்தார், பாவம் முடியவில்லை,
அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்கவில்லை. இப்போது உள்ள
படங்கள் எல்லாம் கற்பனையாக வரையப்பட்ட உருவமேயன்றி
வள்ளலாரின் உண்மை உருவம் அல்ல.
வள்ளலார் ஞான தேகம் அடைந்தார் என்பதற்கு இதுவே போதுமான
சான்றாகும். அப்படியும் நம்பாத ஒரு சிலர்,
அதாவது தொழுவூர் வேலாயுதம்
முதலியார் போன்றோர்,
எதையுமே சோதித்து பார்த்து
பிறகு ஏற்றுக்கொள்ளும்
அற்ப புத்தியுள்ள
தொழுவூரார், நான் குத்தி பார்த்துவிடுகிறேன்
என்று ஆக்ரோஷமாக
தனது முழு
பலத்தையும் திரட்டி
விடுகிறார் பாருங்கள்
ஒரு குத்து,
பாவம் வேலாயுதம், மறுபக்கம் தலை
கீழாக விழுந்து
அவமானம் பட்டதுதான்
மிச்சம் வழக்கம்போல!
ஓர் வேண்டுகோள்: தமிழ் ஓர் ஆழ் கடல், ஆன்மிகம் ஓர் பெருங்கடல், இதில் இறங்கி நாம் கரை சேர முடியாது, வேண்டுமானால் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கலாம் அல்லது முழங்கால் நனையும் அளவிற்கு இரங்கி பார்க்கலாம். ஆனால், அதில் இரங்கி நீந்த முடியாது, மீறினால் அடித்து கொண்டுபோய் ஆழத்தில் சொருகிவிடும். ஆகையால், எழுத்தில், நடையில், இலக்கணத்தில், பொருளில் பிழை இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
Guru: 93633 75062