ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய
ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும்
ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்து (பிறவி,
பிணி, மரணம்) மீட்க, ஆன்மாவாகிய
தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை
அறிதலாகும்.
உடம்புக்கு ‘மெய்’
என்று பெயர். ஆனால் அந்த உடல் கொஞ்ச காலம் உலக
அரங்கில் நடித்துவிட்டு,
இறுதியில் மறைந்து ‘பொய்’ஆகிவிடுகிறதுக்கு!
தன்னையறிய தனக்கொரு
கேடில்லை, தன்னை அறிவதே அறிவாம்
என்று திருமூலர் கூறுகின்றார்.
தீ
அதனை எரிக்காது. நீர் அதனை நனைக்காது. காற்று அதனை உலர்த்தாது என்று கீதை அறிவுறுத்துகிறது.
இத்தகைய ஆன்மா
இந்த உடம்புக்குள்ளே வந்து
அகப்பட்டுக்கொண்டு,
செத்து மீண்டும் பிறந்துகொண்டே
இருக்கிறது!
நம் உடம்பு அழிந்துவிட, தனக்கு வேறொரு உடம்பு தேவைப்படுகிறது.
அதனால் அதற்கு ஒரு புது உடம்பு தேவைப்படுகிறது. புது உடம்பு கிடைக்கவே, அதில் குடிபுகுந்து வாழ்ந்து அந்த உடம்பையும் நோய், மூப்பால் இழந்து விடுகிறது. இப்படி பல உடம்புகளில் புகுந்து
ஆன்மா உலகவாழ்வை தொடர்கிறது!
ஆன்மாவை வினையில் இருந்து மீட்பது
எப்படி என்பதை அறிவதே ஆன்மீகம். ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தால்தான், இறைவன்
இருப்பதை உணர முடியும்!
என்றும் அழிவற்றது ஆன்மா!
ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தமானது. ஆன்மீகத்தில் கூறப்படுவது இறைவனைப்பற்றி.
மற்றவர்களுக்கு இறைவனுடைய பெருமையைக் கூறி, உணர்த்தி அவர்களை இறை
வழிபாட்டில் ஈடுபடுத்தி மகிழ்வதும் ஆன்மீகமாக கருதப்படுகிறது.