செவ்வாய், 29 ஏப்ரல், 2025

அட்சய திருதியை: இது ஓர் மூட நம்பிக்கை!

  

             

அட்சய திருதியை: இது ஓர் மூட நம்பிக்கை!

இந்து மத நம்பிக்கைகளில் அட்சய திருதியை என்பது அதிக அதிஷ்டம் தரும் நாளாக கருதப்படுகிறது. அட்சயம் என்ற சொல்லின் பொருள் ஒருபோதும் குறையாதது என்பதாகும். இந்த நாளில், இந்த நேரத்தில் செய்யப்படும் எந்த மங்களகரமான வேலையும் செழிப்பையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

 அட்சய திருதியை வரும் காலம்:

 பஞ்சாங்கத்தின் படி அட்சய திருதியை புதன்கிழமை அன்று வருகிறது. அட்சய திருதியை பூஜை செய்வதற்கான நல்ல நேரம் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5:31 மணி அளவில் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி மதியம் 2.12 மணி வரை இருக்கிறது.

அட்சய திருதியை: உண்மையின் ரகசியம்!

கண்ணனும் குசேலனும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள், சாந்திபனி குருகுலத்தில் இருவரும் பயின்றவர்கள். படிப்பு முடிந்ததும் இருவரும் பிரிந்தனர். பின்பு, கண்ணன் துவாரகை மன்னன் ஆனார்.

குசேலன் அவன் மனைவி சுசீலை இருவரும் பல குழந்தைகளுடன் வறுமையில் வாடினர். ஒருமுறை சுசீலை கணவனிடம் உங்கள் நண்பர் கண்ணையா உயர்ந்த நிலையில் இருக்கிறார் அவரை சென்று பார்த்து வரலாமே! என்று யோசனை கூறினார், அதற்க்கு சுதாமன் நல்லது, நானும் என் நண்பனை பார்த்து வெகு நாட்கள் ஆகிறது, ஆனால் ஒன்று, நான் அவரிடம் எந்த உதவியும் கேட்கமாட்டேன், சம்மதமா? அரைகுறை மனதுடன் சரி என்றார் சுசீலை!

குசேலரை பார்த்தவுடன் அரண்மனை காவலாளிகள் அனுமதி மறுத்தனர், கண்ணன் தன் நண்பர்  சுதாமன் வெளியில் காத்திருப்பதை உணர்ந்து கொண்டார், அவரே ஓடி வந்து கட்டி தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார் கிருஷ்ணர்.

சிறிது நேர உரையாடலுக்குப்பின், நண்பா நீ ஏதோ  என்னிடம் மறைக்கின்றாய்! என்றார் கண்ணன், குசேலருக்கு திக்கென்றது, தன்னுடைய வறுமையை கண்ணய்யா கண்டு பிடித்து விட்டாரோ? என்று மனதுக்குள் முணுமுணுத்தார் சுதாமன்.

ஆனால் கண்ணன் நண்பரின் வறுமையை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை! மாய கண்ணன் அல்லவா? நீங்கள் மறைப்பது என்னவென்று நான் சொல்லலாமா? என்றார் கண்ணன்! ஒருவித படபடப்புடன், நீயே சொல்லிவிடு மன்னா! என்றார் குசேலர்.

எனக்கு மிகவும் பிடித்த அவல் பலகாரம் உன்னுடைய துணியில் மறைத்து வைத்திருக்கிறாய், சரிதானே? அப்பாடா! ஒருவிதத்தில் இந்த கேள்வி நல்லதுதான் என்று மனதுக்குள் ஒப்பேற்றிக்கொண்ட குசேலர், ஆமாம் கண்ணா என்றார் குசேலர்.

எனக்கு பிடித்த உணவை நீ ஏன் மறைக்கவேண்டும்? என்றார் கிருஷ்ணர். அதர்க்கு அருமையனா பொருத்தமான பதிலை தந்தார் குசேலர். கண்ணையா, நீ இன்று இந்த நாட்டிற்கே மகாராஜா, மன்னாதி மன்னன், மிக உயர்ந்த இடத்தில இருக்கும் நீ எங்கே, ஏழ்மையில் இருக்கும் நான் எங்கே! என்றார் குசேலர் பரிதாபமாக! அதற்கு, அதனால் என்ன? என்று கேட்டார் கண்ணன்!

அன்று நீ இருந்த நிலை இப்பொழுது இல்லை, அதனால் இந்த அவலை நீ ஏற்றுக்கொள்வாயா? மாட்டாயா? என்ற மனக்குழப்பம் எனக்கு. உடனே அவரிடம் இருந்த உணவை பிடுங்கி ரசித்து சுவைத்து சாப்பிட்டார், அருகில் இருந்த ருக்மணி தேவிக்கும் பகிர்ந்தளித்தார் கண்ணன்.

குசேலருக்கு கண்ணீர் கரைபுரண்டோடியது, என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்! கண்ணனின் அன்பு வெள்ளத்தில் மூழ்கிவிட்டான் சுதாமன்.

பிறகு, அரசன் அரசியிடம் விடை பெற்றார் குசேலர், சுசீலையிடம் சொன்னதுபோல், கண்ணனிடம் எந்தவித உதவியும் கேட்காமல் வீடு திரும்பினார் குவ்சேலார்!

பின்பு, அவர் கண்ட காட்சி அவர் கண்ணை அவராலே நம்ப முடியவில்லை, வீடு முழுக்க செல்வம், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், எங்கும் ஆனந்தம், பரவசம்.

குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா!

வறுமையில் இருந்த குசேலர் வளமை அடைந்த தினமே அட்சய திருதியை!

கண்ணனையும், லட்சமியையும் வணங்கும் திருநாளே அட்சய திருதியை!

ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு அன்னதானம் அளிப்பதே அட்சய திருதியை!

வைரமும், தங்கமும் வாங்கி குவிப்பது அல்ல அட்சய திருதியை!

  இங்கேஉள்ள மூன்றுபடங்களை பார்க்கவும்:                                     முன்னது உண்மை, பின்னது பொய்மை, 

                                        இறுதியில் அருமை!

         








         

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

What will happen? Could India-Pakistan tensions spin out of control?

    What will happen?  Could India-Pakistan tensions spin out of control? We are in an awkward situation; two nuclear-armed countries ...